கடனுக்கு தேநீர் கேட்டு சண்டையிட்ட 6பேர்... பின் சிசிடிவி-யில் சிக்கிய பதறவைத்த காட்சிகள்

Report Print Abisha in இந்தியா

கடனுக்கு தேநீர் தர மறுத்த கடை உரிமையாளரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவரது கடைக்கு 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று தினமும் கடன் சொல்லி தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இப்படி சில நாட்கள் செல்ல அந்த கும்பலிடம் இனி கடனை அடைத்தால் தான் தேநீர் தருவேன் என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த கும்பலுக்கும் கடை உரிமையாளர் மாரிமுத்துவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்ற கடனுக்கு தேதீர் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது அந்த கும்பல், மாரிமுத்து தொடர்ந்து மறுக்கவே ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரி முத்துவை சராமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு செய்ததில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்