சிபிஐ விசாரணையின் போது... சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்வி: கசிந்தது தகவல்

Report Print Basu in இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது, நாளை நண்பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ப.சிதம்பரத்திற்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் வாதிட்டதாவது: உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருக்கிறதா? என சிதம்பரத்திடம் சிபிஐ கேட்கிறது .. என்ன வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன? 26 மணிநேர விசாரணைக்கு பிறகும் அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன் வைக்கப்படவில்லை என வாதிட்டார்.

சிபிஐ கேட்கும் அனைத்து கேள்விகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்