தமிழர்களை பெருமையடைய வைத்த ஆளுநர்கள்... யார் எல்லாம் தெரியுமா? வெளியான முழு தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இதுவரை தமிழர்கள் யார் எல்லாம் ஆளுநர்களாக இருந்துள்ளனர் என்பது குறித்து வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் அலுவலகம் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்திற்கு புதிய ஆளுநராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் தெலங்கானா மாநிலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழக பா.ஜ.கவின் தலைவராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குமரி அனந்தனின் மகள் ஆவார்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ராமச்சந்திரன்(கேரளா), சதாசிவம்(கேரளா), சண்முகநாதன்(மேகாலயா), சி.சுப்பிரமணியன்(மஹாராஷ்டிரா), எம்.எம்.ராஜேந்திரன்(ஒடிஷா), ஏ.பத்மநாபன்(மிசோரம்), ESL நரசிம்மன்(தெலங்கானா), ஜோதி வெங்கடாச்சலம்(கேரளா) ஆகியோர் ஆளுநர்களாக இருந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers