தந்தையின் நண்பருக்காக.. இறுதிச்சடங்கில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இஸ்லாமிய சகோதரர்களான அபு, நசீர் மற்றும் ஸுபெர் குரேஸி ஆகியோர் தினசரி கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

நாள்தோறும் 5 முறை நமாஸ் செய்து இஸ்லாமிய முறைப்படி வாழ்ந்து வருகின்றனர். ரம்ஸான் நோன்பையும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாண்டே கடந்த சனிக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அப்போது குரேஷியின் மகன்கள் மூவர் இந்து முறைப்படி அவருக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து குரேஸி கூறுகையில், பாண்டே மாமா படுக்கையில் முடியாமல் இருந்த போது, ஒரு இந்து குடும்பத்திடம் இருந்து கங்கை நீரை கொண்டு வந்தோம்.

அவர் உயிரிழந்ததை அடுத்து, பிராமண குடும்பங்கள் கடைபிடிக்கப்படும் சடங்குகளின் படி அவர் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அக்கம்பத்து வீட்டாரிடம் தெரிவித்தோம். அவரது இறுதி சவ ஊர்வலத்தின் போது பாடையை தூக்கிச் செல்ல ஒப்புக் கொண்டோம்.

பாண்டேவின் சடலத்திற்கு நசீரின் மகன் அர்மன் தான் தீ மூட்டினார்.

பன்னிரெண்டாம் நாள் நிகழ்வின் போது அர்மானின் தலையை மொட்டையடிக்க உள்ளோம். ஏனெனில் இந்து வழக்கத்தின் படி அவ்வாறு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக இவர்கள் நடந்து கொண்ட விதம், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்