சக மாணவரை கத்தியால் தொடர்ந்து வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்... தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் சரமாரியாக வெட்டிய வீடியோ காட்சி வெளியாகி பார்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே கல்லூரியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பர் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்....

இந்நிலையில் இன்று திடீரென்று கல்லூரி வளாகம் அருகே இருவருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் ஆவேசமடைந்த கார்த்திக் கத்தியால் அஸ்வினை சரமாரியாக வெட்டியதால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், கார்த்தியை தடுத்து அழைத்துச் சென்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட அஸ்வினுக்கு கழுத்து உட்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கார்த்திக் அந்த இடத்தை விட்டு ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும், பொலிசார் அவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்