இறந்த பிள்ளையை பையில் வைத்துக் கொண்டு அலைகிறேன்: தோழியைப் பதறவைத்த மாணவி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலிதீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலத்தை பொலிசார் கைப்பற்றிய சம்பவத்தில் மாணவி ஒருவர் கைதாகியுள்ளார்.

கேரள மாநிலத்தின் வாத்திக்குடி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கட்டப்பனா பகுதியில் அமைந்துள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது கல்லூரித் தோழியைத் தொடர்புகொண்ட அவர், தனக்கு பிள்ளை பிறந்து இறந்துவிட்டது. வீட்டுக்குத் தெரியாது.

குழந்தையை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கேன். குழந்தையை அப்புறப்படுத்த உதவி வேண்டும் என்று கோரியுள்ளார்.

முதலில், அவர் கூறுவதை நம்ப மறுத்த தோழி, குழந்தையின் புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து வாட்ஸ்அப்பில் இறந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் அனுப்பவே, அதிர்ச்சியடைந்த தோழி, இதுதொடர்பாக பொலிசாருக்கும் குறித்த மாணவியின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், பைக்குள் பாலிதீன் பையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றியதுடன், இளம்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. குறித்த மாணவி கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்துள்ளார்.

ஆனால், சில காலங்களிலேயே இவர்களின் காதல் முறிந்துள்ளது. அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அந்த இளைஞரை இவர் மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதில் கர்ப்பமாகியுள்ளார். இதனைடையே திருமணம் முறிந்த மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மட்டுமின்றி குழந்தையைக் கலைக்க முடியாமலும், யாருக்கும் தெரியாமலும் இவர் மறைத்துவந்துள்ளார்.

இதற்கிடையே, 6 மாதம் கர்ப்பமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

குடியிருப்பின் கழிவறையிலேயே குழந்தை பெற்றுக்கொண்டவர், யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். வெளியே செல்லும்போது கல்லூரிக்குக் கொண்டுசெல்லும் பேக்கில் குழந்தையை மறைத்துவைத்துள்ளார்.

தோழியிடம் விவரத்தைச் சொல்லும்போது சிக்கிக்கொண்டார். அந்தப் பெண், குழந்தை இறந்தே பிறந்தது எனக் கூறுகிறார்.

ஆனால், எங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. பிரேதப் பரிசோதனைக்கு குழந்தையின் உடலை அனுப்பியுள்ளோம்.

அதில் குழந்தையைக் கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தால், அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்