நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு கிடைக்க போகும் பதவி? அவரின் திடீர் சந்திப்பு குறித்த முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு தமிழக அரசின் மூலம் ஒரு பதவி கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லதா திடீரென சந்தித்து பேசினார்.

சில நாட்களுக்கு முன்பு சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

இதனால் குழந்தைகளை காப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் விரும்பினார்.

இது குறித்து அவர் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார்.

இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து குழந்தைகளை காப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழக அரசும் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த அமைப்பின் தலைவராக லதா ரஜினிகாந்த் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இரு தரப்பில் இருந்தும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்