அந்த கடிதம் கிடைத்து 27 ஆண்டுகள்... மாயமான சகோதரனை தேடி மாநிலங்கள் தாண்டிச் செல்லும் இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து ராணுவப் பணிக்காக 27 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் மாநிலம் சென்று இதுவரை திரும்பாத தமது சகோதரர் தொடர்பில் இளைஞர் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள மாநிலம் தலச்சேரி பகுதியை சேர்ந்த சனல்குமார் என்ற இளைஞர் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆகஸ்டு மாதம், குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அன்புக்குரிய அப்பாவுக்கும் அம்மாவுக்கும், இங்கே எந்த இடையூறும் இன்றி வந்து சேர்ந்தேன். வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் வெப்பம் கொஞ்சம் குறைந்துள்ளது. அனைவரும் ம்னலம் என நம்புகிறேன். என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின்னர் சனலிடம் இருந்து இதுவரை கடிதம் ஏதும் வந்ததில்லை எனக் கூறப்படுகிறது.

சனல் உயிருடன் இருக்கிறாரா என்ற தகவலும் இதுவரை இல்லை. இருப்பினும் கடந்த 27 ஆண்டுகளாக சனல் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவரது உறவினர்கள் இன்றளவும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராணுவ வீரரான சனல்குமார் மாயமானதாக கேரளாவில் உள்ள குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

மூன்று மாத விடுமுறைக்கு பின்னர் 1992 ஜூ;லை மாதம் 31 ஆம் திகதி சனல்குமார் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு ரயில் மூலம் சென்றுள்ளார்.

ஜாம்நகரில் உள்ள அவரது பணியிடத்திற்கு ஆகஸ்டு மாதம் 3-ஆம் திகதி சென்று சேர்ந்ததாக தமது கடிதத்தில் சனல் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்டு மாதம் 9-ஆம் திகதி மிதிவண்டி ஒன்றி சனல் முக்கிய சாலை வழியாக செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக கூறுகின்றனர்.

பின்னர் சனல் பயன்படுத்தியதாக கூறும் அந்த மிதிவண்டியை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 10 ஆம் திகதி முதல் சனல் மாயமானதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சனலின் தந்தை தாமோதரன், பலமுறை மாநில, மத்திய அரசுகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனிடையே தாமோதரன் மரணமடையவே,

தற்போது சனலின் சகோதரர் ஹரீந்திரன் தமது சகோதரரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளார்.

சனல் மாயமானது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ராணுவ அதிகாரிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 ஆம் திகதி சனலை ராணுவத்தில் இருந்து வெளியேற்றியதாக அதிகாரபூர்வ உத்தரவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர்.

1992 செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் அவரை உத்தியோகப்பூர்வமாக வெளியேற்றியுள்ளதாக அந்த கடிதத்தில் ராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பணியிடத்தில் ஏதேனும் பிரச்னை காரணமாக அவர் வெளியேறி ஏதேனும் பகுதியில் உயிருடன் வாழ்ந்து வருவதாகவே சனல்குமாரின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

தற்போது, இந்திய அரசின் அமைச்சர் ஒருவரின் உதவியுடன், ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சனல் தொடர்பில் விசாரிக்க அவரது சகோதரர் ஹரீந்திரன் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்