தமிழகத்தில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த கோவில் அர்ச்சகர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவிலில், அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து அர்ச்சகர் ஒருவர் லதா என்ற பெண்ணிடம் வழங்கியுள்ளார். அதை வாங்க மறுத்த லதா நிகழ்ந்ததை தட்டிக்கேட்டுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அர்ச்சகர், லதாவின் கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவத்தின் வீடியோ வெளியானதை அடுத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த அர்ச்சகர் தலைமறைவானார். இதனை தொடர்ந்து தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இனி வரும் மூன்று மாதங்கள், கோவிலில் அர்ச்சனை உள்ளிட்ட எந்த செயலிலும் அவர் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.