சகோதரி மகள் திருமணத்துக்கு வந்த பேரறிவாளன்! அங்கு வந்த சீமான், நடிகர் சத்யராஜ்... நெகிழ்ச்சி தருணம்

Report Print Raju Raju in இந்தியா

சகோதரி மகள் திருமண விழாவில் பேரறிவாளன் கலந்து கொண்ட நிலையில் அங்கு வந்தவர்கள் அவருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு பின் பரோலில் கடந்த 12- ஆம் திகதி தமிழக அரசின் உத்தரவின்படி வெளியே வந்தார்.

தந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும், தனது சகோதரி அன்புமணி ராசாவின் மகள் திருமணத்தில் கலந்துக்கொள்ளவும் அவர் அனுமதி கேட்ட நிலையிலேயே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்தது.

இதையொட்டி நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பேரறிவாளன் நேற்று மாலை கிரு‌‌ஷ்ணகிரிக்கு வந்தார்.

20-க்கும் மேற்பட்ட பொலிசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர். அங்கு மணமக்களை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தினார்கள்.

இதே போல நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் இயக்குனர் கவுதமன், இயக்குனர்கள் அமீர், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன் உள்பட ஏராளமானவர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, இது எங்கள் குடும்ப விழா. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருமண விழாவில் பேரறிவாளன் பங்கேற்க பரோல் கிடைக்க உதவிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளன் அவரது சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது அவரது சகோதரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...