இளைஞருக்கு உதைக்கொடுத்து நிர்வாணமாக பைக்கில் ஓட விட்ட கிராமமக்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவில் கிராமவாசிகள் சிலர் சேர்ந்து, இளம்பெண்ணை பின்தொடர்ந்த இளைஞருக்கு உதைக்கொடுத்து நிர்வாணமாக இருசக்கர வாகனத்தில் ஓடவிட்டுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் திவிந்த் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தினமும் கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் அவரை பின்தொடர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இதனை அந்த இளம்பெண்ணின் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் நீண்ட நாட்களாக கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் திடீரென ஒரு துண்டு காகிதத்தில் தன்னுடைய செல்போன் எண்களை எழுதி இளம்பெண் மீது தூக்கி வீசியுள்ளார்.

இதனை பார்த்த உள்ளூர் வாசிகள் சிலர், இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கிக்கொண்டிருந்துள்ளனர். சம்பவம் அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு, இளைஞரின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் விரட்டியடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்புமே பொலிஸாரிடம் எந்த புகாரும் அளிக்காத நிலையில், வீடியோ இணையத்தில் கசிந்ததால் பொலிசாரின் கவனத்திற்கு சென்றடைந்தது.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்