கருணைக்கொலை செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய நளினி

Report Print Vijay Amburore in இந்தியா

தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளை கடந்தும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகள் பலவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.

இதனால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி கடந்த 2 நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, "தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார் என அவரை சந்தித்த பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

மேலும், தம்மையும் கணவர் முருகனையும் கர்நாடக மாநில சிறைக்கு மாற்றவும் உள்துறை செயலாளருக்கு மனு கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்