பிரியங்காவின் பலாத்கார வீடியோவை ஆபாச தளத்தில் தேடிய பல லட்சம் பேர்! அதிர்ச்சி தரும் ஆதாரங்கள்

Report Print Santhan in இந்தியா
1325Shares

இந்தியாவில் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் வீடியோவை இணையவாசிகள் ஆபாசதளத்தில் தேடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், லொரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியானவுடன், பிரியங்கா ரெட்டியை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர்.

அந்த பெண் யார்? என்பது குறித்தும், அவரது புகைப்படங்கள் குறித்தும் பல்வேறு வகைகளில் தேடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சுமார் 80 லட்சம் பேர் தேடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கூகுள் வலைதளங்களில் தேடும்போது அவருடைய வீடியோவை தேடியதே மிக அதிகளவில் வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்