திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் தவறு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் ஒரு தனியார் ஹொட்டல் ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

இந்த ஹொட்டல் அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டீல்கள் இருந்ததாலும் பொலிஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் மூடப்பட்டது.

இதனை எதிர்த்து அந்த ஹொட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்து இந்த ஹொட்டல் மூடப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஹொட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹொட்டலில் ஒரே அறையில் தங்குவதால் என்ன தவறு இருக்கிறது. திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கக் கூடாது என்ற சட்டம் ஒன்றும் இல்லை.

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே சீல் வைக்கப்பட்ட ஹொட்டலை மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...