இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை! -அமைச்சரின் விளக்கம்

Report Print Abisha in இந்தியா

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற உள்ளது. அதில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மதம் தொடர்பாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அகதியாக வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டும் என்று மசோதா தாக்கலாக உள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இருந்து இந்தியா வந்த தமிழர்கள் இந்த குடியுரிமை மசோதா செல்லாது. ஆனால், மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கான குடியுரிமைக்கு மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை எதிர்க்கு எதிர்கட்சிகள் மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்னை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்