கெஞ்சிய நிர்பயா பெற்றோர்...13வது நாளாக தொடர்ந்த உண்ணாவிரதம்: சுவாதிக்கு ஏற்பட்ட கதி!

Report Print Basu in இந்தியா

6 மாதங்களுக்குள் கற்பழிப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க காலவரையறையின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், மயக்கமடைந்த பின்னர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உன்னாவ் பெண் எரித்துக்கொல்லப்பட்டதை அடுத்து சுவாதி மாலிவால், கடந்த டிசம்பர் 3ம் திகதி முதல் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும், 6 மாதங்களுக்குள் கற்பழிப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சுவாதி போராடத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சுவாதி மாலிவால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

உண்ணாவிரத்தை மேற்கொண்டு வரும் சுவாதியை நேரில் சந்தித்த நிர்பயாவின் பெற்றோர், உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு முறையிட்டு கெஞ்சினர்.

போராட்டத்தில் ஈடுட்ட சுவாதி, திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இன்று டிசம்பர் 15ம் திகதி 13வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில் மயக்கமடைந்த சுவாதி, எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 13ம் திகதி சிறிய தொல்லைகள் காரணமாக நான் ஒரு பெரிய போரை கைவிடப் போவதில்லை என சுவாதி ட்விட்டரில் பதவிட்டிருந்தார் என்பது நினைவுக்கூரதக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்