செல்போனில் மனைவியிடம் சில்மிஷம்! அரிவாளுடன் கணவர் செய்த செயலின் அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில், தனது மனைவியிடம் ஆபாசமாக பேசிய நபரை தேடி அலுவலகத்திற்கு அரிவாளுடன் வந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. குறித்த நிறுவனம் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை சுலப தவணையில் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்குள் திடீரென்று அரிவாளுடன் நுழைந்த நபர் ஒருவர், ஊழியர்களை மிரட்டி பொருட்களை தாக்கி உடைக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில், கையில் அரிவாளுடன் நுழையும் தொழிலாளி, ஏடிஎம் கார்டை செக் பண்ணுடா, எனது மனைவியை அவதூறாக பேசியது எவன்டா என கோபத்துடன் தகாத வார்த்தைகள் பேசியபடி, அரிவாளை வைத்து ஊழியர்களுடன் தகராறு செய்து மிரட்டுவது போல் இருக்கிறது.

இந்த தொழிலாளி, கம்பம், கோம்பை ரோட்டைச் சேர்ந்தவர் என்பதும், இவர் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் தவணை முறையில் டிவி மற்றும் போன் பெற்றிருப்பதும், போனில் தவணையை கேட்ட நிதி நிறுவன ஊழியர், தொழிலாளியின் மனைவியிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதன் காரணமாகவே நிதி நிறுவனத்திற்குச் சென்று தொழிலாளி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமாக நிதி நிறுவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை, சிறிது நேரத்தில் திரும்ப பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்