லண்டனில் சொத்துக்கள்! 30 வருடங்களாக நடக்கும் ஆயிரம் கோடி மோசடி... வசமாக சிக்கி கொண்ட பெண் யார்?

Report Print Raju Raju in இந்தியா
1523Shares

ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகளை வைத்திருந்த பெண் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலங்களவையில் எம்.பியாக இருந்த லலித் சூரி என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்ட பாரத் ஹொட்டல் என்கிற நிறுவனம் நாடு முழுவதும் லலித் ஹொட்டல் என்கிற பெயரில் ஹொட்டல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் லலித் மறைவுக்கு பின்னர் அவர் மனைவி ஜோத்ஸ்னா தலைமையில் இந்த ஹொட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

டெல்லியில் உள்ள ஜோத்ஸ்னா சூரிக்குச் சொந்தமான 13 வளாகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த ஜனவரி 19-ம் திகதி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுப் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வருமானத்துறை அறிக்கையில், இந்தச் சோதனையில் ரூ.1,000 கோடி மதிப்புக்கும் மேலான வெளிநாட்டு சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர அந்த நிறுவனம், சுமார் ரூ.35 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பையும் செய்துள்ளது. மிகப்பெரிய அளவிலான கறுப்புப் பணத்தை இந்தக் குழுமம் பல்வேறு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளது.

1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்களின் டிரஸ்ட் மூலமாக பல ஆண்டுகளாகப் பதுக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் லண்டனிலும் அவர்களுக்குச் சொந்தமான சொத்துகள் பெருமளவில் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்