மாதவிடாய் காலத்தில் தனியாக இருக்கனும்! 68 கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடுமை... வெளிவந்த முழு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கல்லூரி மாணவிகள் 68 பேரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை சோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலுகின்றனர்.

கல்லூரியின் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி வருகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக ஒதுக்குவதும் அவர்களுக்கு தனியாக சமைப்பதும் இங்கு வழக்கம்.

இதில் 68 மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கும், சமையலறைக்கும் சென்றதாகக் கூறி, விடுதி முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் பெண் ஊழியர்கள் மாணவிகளின் ஆடைகளை களைய வைத்து சோதனையிட்டனர்.

இதோடு அவர்களின் உள்ளாடைகளையும் சோதனை செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் இது குறித்து புகார் அளித்தனர்.

புகாரையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும் பொலிசார் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி முதற்கட்டமாக கல்லூரி முதல்வர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொண்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் பலரும் கொந்தளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers