கொரோனா பீதியால் திருமணத்தை நிறுத்திய பிரபல தமிழ் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா
#S

கொரோனா பீதி காரணமாக தமிழ் படங்களில் நடித்தவரும், கேரளா நடிகையுமான உத்தராவின் திருமணம் நிறுத்தப்பட்டதால், அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை, 170,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,526 பேர் உயிரிழந்துள்ளனர். 77,789 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக பல்வேறு நாடுகள் முடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இப்போது தான் கொரோனா தன்னுடைய ஆட்டத்தை துவங்கியுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, கேரளாவில் நடிகை உத்தரா உன்னியின் திருமணம் நிறுத்தப்பட்டு உள்ளது. பரத நாட்டிய கலைஞரான இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், கொச்சியில் சொந்தமாக நடன பள்ளி நடத்தி வருகிறார். பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள்தான் உத்ரா. இவருக்கும், நிதேஷ் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் கொச்சியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்து இருப்பதாக உத்ரா உன்னி குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்