முதல் இருக்கையில் கொரோனா நோயாளி என்ற அச்சத்தில் விமானி தெரிவு செய்த வழி! வீடியோ

Report Print Abisha in இந்தியா

தான் இயக்கும் விமானத்தின் முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபருக்கு கொரோனா தொற்று இருக்கும் என்று அஞ்சி விமானி ஒருவர் cockpit கீழே குதித்துள்ளார்.

புனோலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் வெளிநாட்டுகளில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் பயணிக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனால், முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து சந்தேகத்தின் பேரில், மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்வாசல்வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விமானி முன்வாசல்வழியாக இறங்க வேண்டும் அல்லது அவசரவழியாக இறங்க வேண்டும். எனவே, அவர் cockpit வழியாக கீழே குதித்துள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதன்பின், அந்த குறிப்பிட்ட நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சூழல், இந்திய விமான சேவையை முற்றிலும் பாதிக்கும் என்று நிபூணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...