பல பெண்களை தனது வலையில் வீழ்த்திய காசி! மோசடிக்கு தந்தையும் உதவி செய்தது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக காசியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் கந்துவட்டி வழக்கில் வங்கி கடனில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் கடன் செலுத்தி முடிவதற்குள் எப்படி காசி பெயருக்கு மாற்றப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உதவி இன்றி ஆவணங்களை மாற்றியிருக்க முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பெண்கள் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்து காசிக்கு உதவி செய்த அவரின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காசியின் தந்தை தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்