சசிகலாவை சமாளிக்க எடப்பாடி போடும் புதிய கணக்கு! நிறைவேறுமா? கசிந்த தகவல்

Report Print Santhan in இந்தியா
22844Shares

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ளதால், அவரை சமாளிக்கவும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சமாளிக்கவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சரியான திட்டம் திட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அகரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும், இன்னும் ஒரு சில மாதங்களில் நிச்சயமாக அவர் வெளியில் வந்துவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி சசிகலா விடுதலையானால், தேர்தல் நேரத்தில் அவர் பக்கம் கட்சி நிர்வாகிகள் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பேச்சு இருப்பதால், அதற்கு இடம் கொடுத்தவிடாக் கூடாது எனவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பி.எஸ்க்கு தப்பி தவறி கூட வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கணக்குப் போடுவதாக கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தான் முதல்வராக இருந்தாலும் கட்சியில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் ஆக்கிவிட்டு, தொடர்ந்து ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருப்பதை எடப்பாடியால் ஜீரணிக்க முடியவில்லை.

அதோடு, சசிகலா விடுதலையாவதற்குள் கட்சியிலும் தன்னை வலுவான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.

எனவே கட்சிப் பதவிகளில் தன் ஆதரவாளர்களுக்கு 60 சதவீதத்தையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு 40 சதவீதத்தையும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது கணக்காக இருக்கிறதாம்.

மேலும் 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று புதிதாக நியமிக்க நினைத்துக்கொண்டிருக்கும் அவர், அவற்றில் பெரும்பாலான பதவிகளில் தனது ஆதரவாளர்களை எப்படியாவது உட்கார வைத்துவிடவேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்துள்ளராம்.

இதனால் சசிகலா விடுதலை தமிழக அரசியலில் ஏதோ ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் இதில் தெளிவாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்