நாம் தமிழர் கட்சியிலிருந்து பேராசிரியர் கல்யாணசுந்தரம் வெளியேறுகிறாரா? அவரே அளித்த பதில்

Report Print Basu in இந்தியா
3175Shares

நாம் தமிழர் கட்சியிலிருந்து பேராசிரியர் கல்யாணசுந்தரம் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.

பேராசிரியர் கல்யாணசுந்தரம் தொலைக்காட்சி விவாதங்கள், கட்சிக்கூட்டம் உட்பட பல நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வெளியேறுகிறார் என பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும், நாம் தமிழர் கட்சிப் பதவிகளில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு, நாடார்களும் முக்குலத்தோரும் ஆதிக்கம் செலுத்துவது கல்யாண சுந்தரம் வெளியேற ஒரு காரணம் என்றும் கூறப்படுவதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் கல்யாணசுந்தரம், நான் கட்சியில் சீமான் அண்ணாவிற்கு அடுத்தநிலையிலும் இல்லை. வெளியேறவுமில்லை. சவுக்கு சங்கர் அவர்களை மதிக்கிறேன். தயவுகூர்ந்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என அன்போடு வேண்டுகிறேன் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்