திருமணமான 3வது நாளில் கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி! அடுத்து நடந்த கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அதிர்ச்சியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5-ந் திகதி, பெற்றோரை எதிர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த, 7-ந் திகதி, மஞ்சுளாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து விசாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.

இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்னர் திரண்டு கோவிந்தராஜின் தற்கொலைக்கு காரணமாக இருந்த, பெண்ணின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்