சசிகலாவை கடும் கோபத்திற்குள்ளாக்கிய அண்ணன் மகள்! என்ன செய்தார் தெரியுமா? ஆதாரங்களை அடுக்கிய தினகரன்

Report Print Santhan in இந்தியா

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், வெளியில் வந்த பின் கிருஷ்ணப்ரியாவுக்கும் நிச்சயம் சசிகலா ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா வரும் ஜனவரி மாதமோ, அல்லது அதற்கு முன்னதாகவோ விடுதலையாகவுள்ளார்.

அவரின் விடுதலை தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து, சசிகலாவை கண்டுகொள்ள கூடாது, அவரை அலட்சியப்படுத்த வேண்டும் என்று முடிவு கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கொதிப்பில் இருக்கிறாராம். ஏனெனில், தினகரனை ஓரம்கட்டும் நோக்கத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததே கிருஷ்ணப்ரியா எனவும், அது தனக்கு ஆபத்தாகவும் திரும்பியுள்ளது என்றும் சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு, போனை போடு மிரட்டுவது, வீட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகளிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோரணையில் பேசி, மிரட்டுவது என்று அத்து மீறி போகின்றாராம்.

இது தொடர்பான ஆதாரங்களை எல்லாம் தினகரன் சசிகலாவிடம் அடுக்கவே, கிருஷ்ணப்ரியா ஓரரங்கட்டப்பட்டார்.

தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்பதால், சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்ததும், கிருஷ்ணப்ரியாவுக்கு கண்டிப்பாக ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருப்பதாக மன்னார்குடி வட்டாரம் கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்