ரத்த வெள்ளத்தில் தாய்... தூக்கில் தொங்கிய தந்தை! நள்ளிரவில் நடந்த பயங்கரத்தால் கதறி துடித்த குழந்தைகள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(42). தேங்காய் வெட்டும் தொழில் செய்து வரும் இவருக்கு தங்கம்(37) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், ராகுல் என்ற 11 வயது மகனும், தனுஷியா என்ற 10 வயது மகளும் உள்ளனர்.

ராஜசேகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்தி வந்து வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இது போன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், ராஜசேகனுக்கு இருந்த வேலையும் கிடைக்கவில்லை.

அப்படி இருந்தும், சில வேலைகள் கிடைத்தால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தால், குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

கணவன் இப்படி இருப்பதால், குடும்பத்தில் வறுமை வாட்டியது. இதனால் தங்கம் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

ஆனால், ராஜசேகரன் மனைவியை வேலைக்கு செல்ல கூடாது என்று கூறிவிட்டார். இருப்பினும் பிள்ளைகளுக்கு சாப்பாட்டு செலவு, வீட்டுச்செலவை சமாளிக்க சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இது வீட்டில் பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. சம்பவ தினத்தன்று தங்கம் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிய அவர் இரவு நேரத்தில் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மது போதையில் வந்த ராஜசேகரன் பிரச்சனை செய்து விட்டு வீட்டில் தூங்கியுள்ளார். அதன் பின் திடீரென்று நடுராத்திரியில் விழித்து, மனைவி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்று, அவரை தேங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இன்னொரு அறைக்குள் ஓடிப்போய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு விழித்து வந்து பார்த்த குழந்தைகள் அலறியுள்ளனர். அம்மா ரத்த வெள்ளத்தில், அப்பா தூக்கிலும் தொங்குவதை கண்டு கத்தி கூச்சலிட்டனர்.

அதன் பின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து, பொலிசாருக்கு தகவ்ல கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் 2 பேரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்