வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்! வீட்டில் மனைவி தூங்கி கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் குடும்பத்தாருடன் வீட்டில் பெண் தூங்கி கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர் அப்பெண் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டபம் அருகே சுந்தரமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி முருகேஸ்வரி (42). சந்திர போஸ் வெளிநாட்டில் வேலைசெய்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முருகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று முருகேஸ்வரி அணிந்திருந்த எட்டரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

இதை உணர்ந்த முருகேஸ்வரி அதிர்ச்சியடைந்த நிலையில் கூச்சலிட்டார், அவரின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் திருடனை துரத்தி சென்றனர்.

ஆனாலும் அவனை அவர்களால் பிடிக்க முடியவில்லை, இது தொடர்பான புகாரின் பேரில் மண்டபம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்