வேல்யாத்திரை தொடங்க முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பலரை பொலிசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் வேல்யாத்திரை நடத்த பாஜக தரப்பதில் அனுமதி கோரப்பட்ட நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்தது.
எனினும், தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, சென்னையில் இருந்து திருத்தணி வரை 7-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
திருத்தணியில் சாமி தரிசனம் செய்த எல்.முருகன், பின் அங்கு கூடியிருந்த கட்சியினரிடையே உரையாற்றினார்.
இதனையடுத்து, தமிழக அரசாங்கத்தின் தடை மீறி எல்.முருகன் உட்பட பாஜக-வினர் திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை தொடங்க முயன்ற போது பொலிசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பலரை சமூக நலக்கூடத்தில தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.