திருமணமான பெண்ணை வற்புறுத்தி சீரழித்த 17 வயது சிறுவன்! வீடியோ வைத்து மிரட்டி வந்த துயரம்

Report Print Santhan in இந்தியா
5355Shares

உத்திரப்பிரதேசத்தில் திருமணமான பெண்ணை வற்புறுத்தி சீரழித்த 17 வயது சிறுவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளான்.

அப்போது சிறுவன், அதை வீடியோவாக எடுத்து, வைத்து கொண்டு, நடந்ததை வெளியில் சொன்னால், இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் அப்பெண்ணும் பயத்தில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுவன் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளான். அந்த பெண், சிறுவனின் பேச்சுக்கு பயந்து கட்டுப்பட்டு இருந்தும், வீடியோவை பதிவேற்றம் செய்ய, அது ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டது.

இதையடுத்து, உறவினர்களும், ஊர்மக்களும், அந்த பெண்ணின் கணவரிடம் இதை பற்றி கூறி, குறித்த வீடியோவை காண்பித்துள்ளனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டே வெளியில் அடித்து விரட்டியடித்துள்ளார். ஏங்கு போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த பெண், வேறு வழியின்றி காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி புகார் அளிக்க, பொலிசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்