நூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி மிரட்டிய காசியை நினைவிருக்கா? புதிதாக பகீர் கிளப்பிய கல்லூரி மாணவி

Report Print Raju Raju in இந்தியா
1343Shares

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை தனது வலையில் வீழ்த்தி ஏமாற்றிய காசி தன்னிடமும் மோசடி வேலையை காட்டியதாக கல்லூரி மாணவி தற்போது புகார் கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

காசியின் பெயரைத் தமிழகத்தில் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நாகர்கோவிலைச் சேர்ந்த காசி சமூக வலைத்தளங்கள் வழியாகப் பெண்களைத் தொடர்பு கொண்டு நட்பாகப் பழகி அவர்களைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

பின்னர் அந்த பெண்கள் காசி மீது முழு நம்பிக்கை வைத்த பின்னர், அவர்களோடு தனிமையிலிருந்து அதை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், தனது ஆசைக்கு இணங்காத பெண்களின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், காசியின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது, இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர். காசி மீது மேலும் பல வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுவரை காசியின் மீது தைரியமாக 4 பெண்கள் புகார் கொடுத்திருந்தனர்,

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காசியின் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். சிபிசிஐடி பொலிசாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரின் அடிப்படையில் காசியின் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல மாதங்களாக யாரும் காசியின் மீது புதிய புகார் அளிக்காத நிலையில் திடீரென மாணவி புகார் அளித்துள்ளது இந்த வழக்கில் புதிய அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்