முதலிரவில் தான் கணவரைப் பற்றி உண்மை தெரிந்தது! அதன் பின் மாமியார் வீட்டில் நடந்த கொடுமை: ஜெயமலாவின் முழு வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிய மருமகள் சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சவுகார்பேட்டையில் ஜெயமலா என்பவர் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றார்.

இதையடுத்து ஜெயமலா உட்பட 3 பேரை பொலிசார் டெல்லியில் கைது செய்தனர்.

அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ஜெயமலா தன்னுடைய மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், கனவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதன் காரணமாகவும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் அளித்த முழு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அதில், திருமணம் முடிந்த முதலிரவிலே கனவர் மனநிலை சரியில்லாதவர் என்பதை அறிந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.

இருப்பினும் எப்படியோ இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். என் மாமியார் வீட்டை சேர்ந்த உறவினர்கள் 2 பேர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

நான் உடை மாற்றும்போதும், குளிக்கும்போதும் ரகசியமாக பார்த்து ரசித்தனர். ஒருநாள் நான் குளிக்கும்போது என்னை ரகசியமாக ஒளிந்து பார்த்ததை நான் பார்த்துட்டேன்.

இதுகுறித்து கணவனிடம் கூறினேன். ஆனால் அதை அவர் கண்டுக்கவே இல்லை. பின்னர் எனது கணவர் கண்முன்னாடியே எனக்கு பாலியல் கொடுமைகள் அரங்கேறின.

இதை எனது மாமியாரிடம் சொன்னேன். இதெல்லாம் கூட்டு குடும்பத்தில் சகஜம் என்று சொல்லிவிட்டார். 4 கோடி ஜீவனாம்சம் கேட்டேன். ஆனால், 25 லட்சத்தை மட்டும்தான் தருவதாக சொன்னார்கள்.

இதுதான் ஆத்திரம் வந்தது. என்னை அசிங்கமாக பேசினார்கள். இதன் காரணமாக கொலை செய்ய முடிவு செய்தோம்.. என் தம்பிகள் என்னை வெளியில் காத்திருக்க சொன்னார்கள்.

ஆனால், நான் எனது கணவர் குடும்பம் துடித்து சாவதை நேரில் பார்க்கணும், சந்தோஷப்படணும் என்று சொன்னேன்.. அதன் பின்பு தான் இந்த கொலை நடந்தது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், ஜெயமாலாவின் தம்பி கைலாஷ் அவருக்கு தெரிந்த ஒய்வு பெற்ற விமான படை அதிகாரியிடம் இருந்து கைத்துப்பாக்கியை வாங்கி ஒத்திகை பார்த்துள்ளார்.

சத்தம் அவ்வளவாக வெளியே வராத துப்பாக்கியை தெரிவு செய்தும், அதன் பின்துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்