சீமான் உங்கள் அணிக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா? நடிகர் கமல் கொடுத்த தெளிவான பதில்

Report Print Santhan in இந்தியா
0Shares

நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுக, அதிமுக போன்ற அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இப்போதே இறங்கிவிட்டன.

குறிப்பாக மக்கள் நீதி மய்யமும், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சீமான், சரக்குமார் எங்கள் அணிக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும், சீமான், சரத்குமார் போன்றோர் எங்கள் அணிக்கு வரலாம், மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், எங்கள் அணிக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்