மீண்டும் ஹேக்கர்கள் கைவரிசை: இப்போது திருட்டு எங்கு இடம்பெற்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

உலகை ஆட்டிப்படைக்கும் முன்னணி இணையத்தளங்களைக் கூட ஹேக்கர்கள் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களும் விதிவிலக்கு அல்ல.

இப்படியிருக்கையில் தற்போது மற்றுமொரு தகவல் திருட்டு இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் தனி நபர்களின் தகவல்கள் அரச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களின் ஊடாக திருடப்பட்டுள்ளது.

அதாவது http://healthcare.gov/ எனும் இணையத்தளத்திலிருந்து தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

இத் தாக்குதலினால் 75,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் திருட்டானது கடந்த அக்டோபர் 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்