G8s ThinQ எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது LG

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

LG நிறுவனமானது G8s ThinQ எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது தற்போதைய நாணயமாற்றுவீதத்தின்படி 523 டொலர்களாக காணப்படுகின்றது.

அதாவது இந்திய நாணயப் பெறுமதியில் 36,990 ரூபா ஆகும்.

இக் கைப்பேசியானது Qualcomm® Snapdragon™ 855 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இதன் திரையாது 6.2 அங்குல அளவுடையதும், 2248 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ OLED தொழில்நுட்பத்தினால் ஆனதாகும்.

இக் கைப்பேசியில் 13 மெகாபிக்சல்கள், மற்றும் தலா 12 மெகாபிசல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 3 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கமெராவும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை LG நிறுவனம் G60 எனும் பட்ஜட் விலையிலான மற்றுமொரு கைப்பேசியினையும் இவ் வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.

இதன் விலையானது 191 டொலர்கள் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers