ரூ.1200 கோடி சொத்திற்கு அதிபதியின் மகன் திருமணம்: பதிவு அலுவலகத்தில் நடந்ததன் காரணம்?

Report Print Printha in வாழ்க்கை முறை
2220Shares
2220Shares
Promotion

திருமணம் என்றாலே விலை உயர்ந்த விதவிதமான பட்டுகள், நகைகள் தான் நம் கண் முன்னே வந்து நிற்கும்.

அத்தகை திருமண விழாவில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கூட்டமும், மகிழ்ச்சியும் பொங்கி எழும்.

இவ்வாறு கோலாகலமாக நடைபெறும் திருமணத்தை கோடீஸ்வரராக இருந்தும் தனது மகன் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார் கேரளாவின் தொழிலதிபர்.

கேரளாவை சேர்ந்த 1200 கோடி ரூபாய் சொத்திற்கு அதிபதியான தொழிலதிபர் பொறிஞ்சு வெலியத் தனது மகன் சன்னி வெலியத்தின் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், என் மகனின் திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இனிதே நடந்து முடிந்தது.

அந்த அலுவலக வேண்டுகோளின் படி, இரண்டு கம்ப்யூட்டர்களை அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டோம். இதுவே எனது மகன் திருமணத்தின் செலவாகும்.

என் மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தியதற்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை, என் திருமணம் கூட இப்படி தான் நடந்தது.

அது மட்டுமில்லாமல் என் மகன் அமெரிக்காவில் பணிபுரிகின்றான். அவன், திருமணம் முடிந்ததும் விரைவாக அமெரிக்கா திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருந்தார்.

பின் மணமகள் வீட்டாரும் எளிய முறையில் திருமணம் செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதனால் என் மகனின் திருமணத்தை எளிதில் முடித்துவிட்டோம் என்று தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்