மலேசியாவில் இருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள்: கண்ணீர் மல்க மனைவி கோரிக்கை

Report Print Deepthi Deepthi in மலேசியா

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் மலேசியாவில் கை, கால்கள் உடைந்த நிலையில் போராடும் கணவரை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பஞ்சவர்ணம் என்ற இளம்பெண்ணின் கணவர் ராக்கன் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மலேசியாவில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அவர் தங்கியிருந்த இடத்தில் உடன் இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டதில், கடுமையாக தாக்கி கை, காலை உடைத்துள்ளார்கள். இதனால் ராக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அங்கு யாரும் அவரைப் பார்த்துக்கொள்ள ஆள் யாரும் இல்லை. இதனால் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை இந்திய வெளியுறவுத்துறை மூலம் தமிழக அரசு மீட்க வேண்டும் என அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்