வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

Report Print Printha in மருத்துவம்
2163Shares
2163Shares
ibctamil.com

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நெருங்கும் போது உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்க அற்புத தீர்வுகள் இதோ,

 • பருத்தி செடியின் இலை அல்லது அதன் மொட்டை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மையாக அரைத்து, 30 மி.லி பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வர வேண்டும்.
 • சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • வெள்ளரிக்காயின் விதையை நன்றாக அரைத்து, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
 • அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 5 நாட்கள் குடிக்க வேண்டும்.
 • சுத்தமான முருங்கை மரத்தின் பிசினை சிறிதளவி எடுத்து நன்கு தூளாக்கி, பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
 • ரோஜா குல்கந்தை ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்திகரிப்பதோடு, வெள்ளைப்படுதல் பிரச்சனையும் குணமாகும்.
 • சந்தனக் கட்டையை மையாக அரைத்து அதை பாலிடன் கலந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் விரைவில் குணமாகும்.
 • பொடுதலைக் கீரையுடன் சீரகம் சேர்த்து அரைத்து அதனுடன் தயிர் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 • வாழைப் பூவில் இருந்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • அடிக்கடி அன்னாசிப் பழம் மற்றும் உணவில் பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலே வெள்ளைப்படுதல் பிரச்சனை வராது.

 • வல்லாரைக் கீரையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து, அதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

 • தினமும் நாவல் பழம் மற்றும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைவதுடன், கர்ப்பப்பைக் கோளாறு மற்றும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்