தொடர்ச்சியான இருமல் பிரச்சனையா? எளிய வழி இதோ

Report Print Printha in மருத்துவம்
438Shares
438Shares
Seylon Bank Promotion

நோய்த்தொற்றுக்கள் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதில் இருமல், சளி தொல்லையும் ஒன்று. இதனை போக்க எளிய மருத்துவம் இதோ,

இருமலை போக்க என்ன செய்ய வேண்டும்?

 • வெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் 2 முறை சாப்பிட வேண்டும்.

 • தொடர் இருமல் அல்லது மார்பு வலியோடு இருமல் இருந்தால் தைம் இலைகளை நீரில் போட்டு, 10 நிமிடம் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

 • வெறும் சுடுநீர் அல்லது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும்.

 • ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.

 • நீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி போட்டு, 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து சூடு ஆறியதும், அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

 • உலர் திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்து, அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, அதை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.

 • மாதுளம் பழச்சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 • நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.

 • புதினாவை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

 • பூண்டுப் பற்களை எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பொரித்து, அதன் சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

 • வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கி, அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

 • வெறும் ஏலக்காயை கடித்து மென்று சாப்பிட்டு வந்தால் கூட இருமல் பிரச்சனை வராது.

 • ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்கண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்