பிரியாணி இலையை எரித்து சுவாசியுங்கள்: அற்புதம் இதோ

Report Print Printha in மருத்துவம்
474Shares

சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க பிரியாணி இலை பயன்படுகிறது. அதோடு மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில்(Aromatherapy) சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கூட உதவுகிறது.

இந்த பிரியாணி இலையை பயன்படுத்தி மன அழுத்தத்தை எளிமையாக குறைப்பதற்கு ரஷ்ய ஆய்வாளர் கென்னடி என்பவர் ஒரு அற்புத ஐடியாவை கூறியுள்ளார்.

பிரியாணி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.

நன்மைகள்
  • பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதிற்கு அமைதியை தருகிறது.
  • பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், அது வீட்டில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றி, வீட்டை நல்ல நறுமணத்துடன் மாற்றி, நேர்மறை ஆற்றல்களை வீடு முழுவதும் உருவாக்குகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்