இதை மட்டும் செய்திடுங்கள்! தலைவலி பறந்தோடும்

Report Print Fathima Fathima in மருத்துவம்
331Shares
331Shares
ibctamil.com

பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி.

தலைவலி வந்தவுடனே மாத்திரைகள் போட்டுக் கொள்கிறோம், நாளடைவில் இது வழக்கமாக மாறிவிடும்.

ஆனால் மாத்திரைகளுக்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தலைவலியை குணப்படுத்தலாம்.

  • கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும், கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது.
  • ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் தலைவலியின் தீவிரம் குறையும்.
  • யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் செய்வதும் நல்ல தீர்வை தரும்.
  • பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப் போல அரைத்து பசைபோலாக்கி, நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும், இப்படி செய்தால் தலைவலி சரியாகும்.
  • சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜூஸ் எடுத்து, இந்த ஜூஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும்.
  • சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டாலும் தலைவலி சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்