அசைவ உணவு செரிக்கவில்லையா? இதனை செய்திடுங்கள்

Report Print Kabilan in மருத்துவம்

செரிமானத்தை தூண்டக்கூடிய சில இயற்கை உணவுகளை, அசைவ உணவு உண்ட பின்னர் எடுத்துக் கொண்டால் நச்சுத்தன்மை நீங்கி உணவு ஜீரணமாக வழி வகுக்கும்.

அசைவ உணவுகளை உட்கொண்ட பின் அஜீரணக் கோளாறு உண்டாகும் வாய்ப்பு அதிகம். இதற்கு காரணம் அந்த உணவுகளில் உள்ள நச்சுத்தன்மை தான். இவை செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை தான் செரிமானத்திற்கு உதவுகின்றன. இந்த செரிமானத்திற்கு சில வகை இயற்கையான உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

வெந்நீர்

அசைவ உணவுகளை சாப்பிடும்போது குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுகச் செய்து, செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, உணவு உண்ட பின்னர் மிதமான சூட்டில் நீரை பருக வேண்டும்.

இது அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். மேலும், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் தூண்டப்படுவதால் செரிமானம் எளிதாகும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள அதிகளவு மினரல்கள், வைட்டமின்கள் செரிமானப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். எனவே, பப்பாளியுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிளிந்து அல்லது புரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிட செரிமானம் எளிதாக நடைபெறும்.

சீரகம்

சீரகம் கலந்த நீரை குடித்தால் அசைவ உணவால் ஏற்பட்ட அஜீரணம் நீங்கி செரிமானமடையும். மேலும், இது மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தை தடுக்கும்.

புதினா சாறு

வயிற்றுக்கும், உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள Sphineter சதையை நிதானப்படுத்த புதினா உதவுகிறது. எனவே, அசைவ உணவு உண்ட பின்னர் புதினா மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஜூஸை குடிக்க வேண்டும்.

இதன்மூலம், செரிமான பிரச்சனை சரியாவதுடன், வாயுப்பிடிப்பு, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளும் நீங்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்தின் மூலம் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். அத்துடன் உணவுக் குழாயில் அமிலங்கள் படிவதை தடுக்கும். எனவே, வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் பிரச்சனைகள் நீங்கும்.

கிரீன் டீ

அசைவ உணவு சாப்பிட்டு முடித்த பின்னர், ஒரு மணிநேரம் கழித்து 50 மில்லி லிட்டர் கிரீன் டி அருந்தலாம். இதன் மூலம் செரிமானம் எளிதாக நிகழும். காலை, மாலை என ஒருநாளைக்கு இருமுறை கிரீன் டீயை அருந்தலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers