இரவில் நிம்மதியான தூக்கம் வர ஒரு டம்ளர் இதை மட்டும் குடிங்க!

Report Print Jayapradha in மருத்துவம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். மேலும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இப்படி இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கீழே குறப்பட்டுள்ள பானத்தை குடித்து நிம்மதியான உறக்கத்தை பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
 • இஞ்சி பவுடர் – 1 டீஸ்பூன்
 • தேங்காய் பால் – 2 கப்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
 • தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
 • ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு அதை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி பின் அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.<
 • இந்த கலவையை தினமும் இரவில் படுக்கும் முன் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வந்தால், மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
நன்மைகள்
 • இஞ்சியில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான குமட்டல், வாந்தி, புற்றுநோய், எடை குறைவு போன்றவற்றை குணப்படுத்தும்.
 • தேங்காய் பாலில் உள்ள நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்புக்களைக் கரைக்கும்.
 • மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால் அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது, அல்சரைக் குணப்படுத்த உதவுகின்றன.
 • மஞ்சளுடன் மிளகை சேர்க்கும் போது மஞ்சளில் உள்ள முக்கிப் பொருளான குர்குமினை உறிஞ்சும் செயல் துண்டப்படும்.
 • தேன் தூக்கமின்மையைப் போக்கி ஆற்றலை அதிகரிக்கும், சோர்வைப் போக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்