ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம்: குறைக்கும் அற்புத மருந்து இதோ!

Report Print Jayapradha in மருத்துவம்

இன்றைய கால உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தன் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்.

மேலும் இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து பார்ப்போம்.

அறிகுறிகள்
  • இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள் ஏற்படும்.
  • மேலும் எப்பொழுதும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தேவையான பொருட்கள்
  • தண்ணீர் – 1 லிட்டர்
  • கிராம்பு – 60 கிராம்
  • பட்டை – 4 துண்டுகள்
செய்முறை
  • ஒரு சிறுபாத்திரத்தில் 1 லிட்டர் நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு ஒன்றாக கலந்து அதனை ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
  • பின் இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்