இந்த சிறிய விதைக்குள் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? அது என்ன தெரியுமா

Report Print Kavitha in மருத்துவம்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று நமது முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனெனில் இது ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாகும்.

கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து, சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

மேலும் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன.

இது உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிக்கின்றது.

அந்தவகையில் கடுகில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Google

  • ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • கடுகு பொடியில் நீர் விட்டு குலைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும்.
  • புளி ஏப்பம், வயிறு உப்புசத்து கடுகு பொடி, சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் பொடி, உப்பு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதில் 2 பல் பூண்டு தட்டி போட்டு குடிக்கலாம்.
  • சிறிதளவு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும்.
  • கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டி போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும்.
  • கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
  • திடீரென வயிற்று வலி ஏற்பட்டால், சுமார் 6 சொட்டு அளவுக்கு விளக்கெண்ணெய் எடுத்து, தொப்புளை சுற்றி போடவும். இவ்வாறு செய்தால் சிறிது நேரத்தில் வயிற்று வலி இல்லாமல் போகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்