வாய்ப்புண்ணை அலட்சியப்படுத்தாதீர்கள்!... புற்றுநோயாக கூட மாறலாம்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

உடலில் ஏதாவது பிரச்சினை இருந்தால் முதலில் வாயில் புண் வரும், அதுவே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கான அறிகுறி.

வாய்ப்புண் வந்துவிட்டால் தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள், உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள்.

மனஅழுத்தம் இருந்தால் கூட வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்புண்டு. சிகரெட் பிடித்தல், மது அருந்திவிட்டு சரியாக சாப்பிடாமல் தொடர்ந்து தூங்கினாலும் வாயில் புண்கள் வரும், மலச்சிக்கல் இருந்தாலும் வாய்புண் வரும்.

அப்படி வாய்ப்புண் வரும்போது சரியாக நம் உடலை கவனிக்காவிட்டால் அது புற்றுநோயாக கூட மாற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இரப்பை, குடல் சார்ந்த நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்புண்கள் வராமல் இருக்க, குணப்படுத்த இயற்கை வைத்தியம்

  • மலச்சிக்கல் வராமல் தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

  • வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது இளநீர் குடிக்க வேண்டும்.

  • சத்தான காய்கறிகள் உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • தினமும் ஒரு வேளையாவது பழங்கள் சாப்பிட வேண்டும்.

  • வாய்ப்புண் வந்தால் தேங்காயை அரைத்து அதிலிருந்து பாலை வடிகட்டி 2 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வாய்ப்புண் சரியாகும்.

  • மணத்தக்காளி கீரை வாய்ப்புணை குணப்படுத்தக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

  • அகத்திகீரையை கொஞ்சம் நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டாலும் வாய்ப்புண் குணமாகும்.

  • வெண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் வாய்ப்புண் குணமாகும்.

  • நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்தாலும் வாய்ப்புண் ஆறும்.

  • கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளித்தால் புண் ஆறும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்