இதயம் பற்றியும், இதயத்தை பாதுகாக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்வோம்

Report Print Nalini in மருத்துவம்

நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம்.

இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், டிரைகைடு' என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது.

மைட்ரல்' என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்தமாக எடுத்து செல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு மூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு, இதயம், 72 தடவை துடிக்கிறது.

ஹார்ட் பிளாக் அறிகுறிகள் :

இதயத்தில் ஹார்ட் பிளாக் வந்தால் மயக்கம், தலை சுற்றல், தலைகனம், லேசாக தலை ஆடுவது, அசதி, பலமின்மை, மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, வலிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும். முதன்முறையாக வந்தாலோ, அடிக்கடி வந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

ஹார்ட் பிளாக் சிக்கல்கள்:

ஸ்ட்ரோக் ஆடம்' என்ற மயக்கம் வந்தால், வலிப்பு உருவாக, மரணம் ஏற்படும். ரத்த கொதிப்பு குறைந்து, அதன் விளைவாக, ஹார்ட் பெய்லியர், மயக்கம், டார்சி டீ பான்ஸ் என்ற வேகமான துடிப்பு ஏற்பட்டு, இதயம் நின்று விடும்.

இதயத்தை பாதுகாக்கும் பயிற்சிகள்

நடைப்பயிற்சி

சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, இதயம் நன்கு இயக்குவதற்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு பலமுறை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

மாடிப்படி ஏறும் பயிற்சி

மாடிப்படிகளில் ஏறும் பயிற்சியானது, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

ஏரோபிக் பயிற்சி

ஏரோபிக் பயிற்சியானது வயதாவதால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது. இவ்வகைப் பயிற்சிகள் இதயத்தின் துடிப்பை அதிகரிக்காது. ஆனால் உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வலுவிழந்து காணப்படும் தசைகள் மற்று இதர தசைப்பகுதிகள் உறுதி பெறவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சியானது உடல் முழுவதற்குமான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியானது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இதயத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்