ஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக வியூகம் அமைக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் கடும் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலக அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ள டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் கலவரத்தை உண்டாக்கியுள்ளது.

ஒட்டு மொத்த அரபு நாடுகளும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. தனது முடிவை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.

மேற்கு கரை மற்றும் காஸா பகுதியின் வீதிகளில் மூன்றாம் நாளாக பாலத்தீனிய மக்கள் போராடி வரும்நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் உள்பட 22 நாடுகளின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கொய்ரோவில் பேச்சுவார்த்தைகள் முடிந்த சில மணிநேரத்தில் இந்தத் தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட பல அமெரிக்க நட்பு நாடுகள் இதற்கு ஆதரவளித்துள்ளன. இந்த நாடுகள் ஏற்கனவே தங்களது கவலைகளை தெரித்திருந்தன.

இந்த முடிவின் மூலம் இஸ்ரேலிய பாலஸ்தீனிய சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து, ஒரு தூதராக அமெரிக்கா தன்னை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

டிரம்பின் முடிவு ஆழ்ந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கோபத்தை மூட்டுகிறது மற்றும் பிராந்தியத்தில் மேலும் வன்முறை மற்றும் குழப்பங்களுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்படும் என 3 முக்கிய தீர்மானங்களை அரபு நாடுகள் எடுத்துள்ளன.

முன்னதாக தெற்கு இஸ்ரேஸ் நோக்கி ராக்கெட் ஏவப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக காஸா பகுதியில் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

மேற்கு கரையின் 20 இடங்களில் 600க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாதுகாப்பு படை மீது கற்கலையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

வடக்கு இஸ்ரேலில் ஒரு பேருந்து மீது கற்கள் வீசப்பட்டது. இதில் 3 இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும். யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தலங்கள் இங்கு உள்ளன.

3,30,000 பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கின்றனர். இவர்களுடன் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் 2,00,000 இஸ்ரேலிய யூதர்கள் வசிக்கின்றனர். சர்வதேச சட்டத்தின்படி, இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers