தீவிரவாதிகளுடன் தொடர்பு: சவுதி அரேபியாவில் இலங்கையர் அதிரடி கைது

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சவுதி அரேபியாவில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த செய்தியை உள்ளூர் பத்திரிக்கையான Saudi Gazette வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான உள்துறை அமைச்சகத்தின் சாளரமான Nafidha வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சவூதி அரேபியாவின் புலனாய்வு சிறைகளில் 40 நாடுகளை சேர்ந்த தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் 999 நபர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, சீனா, ரஷ்யா, ஓமன், கென்யா போன்ற நாடுகள் தற்போது புதிதாக இடம்பிடித்துள்ளன.

சந்தேக நபர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers