தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட சிறுவன்: நெஞ்சை உருக்கும் இறுதிச்சடங்கு வீடியோ வெளியானது

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.

சவுதி அரேபியாவில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சன்னி மற்றும் ஷியா பிரிவு ஆகியவை முக்கியமானது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை சன்னிதான் மிகப்பெரும் பிரிவு

இந்நிலையில் கடந்த 7-ம் திகதி மதினா நகரில் உள்ள மசூதிக்கு ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன் தன் தாயுடன் சென்றுள்ளார். இது சன்னி அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து சிறுவனும் தாயும் காரில் ஏறிப் புறப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் கார் ஓட்டுநர் சிறுவனின் தாயிடம் ஷியா பிரிவா எனக் கேட்டுள்ளார். அதற்குத் தாயும் ஆம் என பதிலளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் காரை நிறுத்திய ஓட்டுநர், தாயிடம் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து காரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

பின்னர் சாலையில் கிடந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து அதிலிருந்து கூர்மையான கண்ணாடியின் ஒரு பகுதியினால் சிறுவன் ஸகாரியா சாகும் வரை அவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சன்னி பிரிவினர் தொழுகை செய்த இடத்துக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுவன் சென்றதால் அவனுக்கு இந்தக் கொடுமை நேர்ந்துள்ளது.

தன் கண் முன்னே மகன் கொல்லப்படுவதைப் பார்த்துக் கதறிய தாய் செய்வதறியாது சுயநினைவை இழந்து சாலையிலேயே சரிந்து விழுந்துள்ளார்

சிறுவன் கொல்லப்பட்டத்துக்கான காரணமாக, டிரைவர் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பிரிவினைவாதத்தை காட்டுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இறந்த சிறுவன் ஸகாரியாவின் இறுதிச் சடங்கு வீடியோ வெளியாகி சவுதி உள்படப் பல நாட்டு மக்களின் மனதை கண்கலங்கச் செய்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers